ஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும்!
1970 இல் வெளிவந்த சிறுகதை!
அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த, கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற காரியத்தில் முனைந்தாள்.
" என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.
"போன வாரம் புதுச் செருப்பு வாங்கினேன், கடிச்சிருச்சுங்கோ. மிஷின் தைக்கிறதில விரல் அசையறதினால சீக்கிரம் ஆற மாட்டேங்குது." என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்."பாத்தீங்களாங்கோ..செருப்புக் கூடப் புதுசா இருந்தாக் கடிக்குதுங்கோ....அதுக்காக பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?"