திங்கள், 21 நவம்பர், 2016

வருது... வருது... வலைப்பதிவர் திருவிழா!


வலைப்பதிவர் திருவிழா!

                                                                            
                                                                                      

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்க இருக்கின்றது... 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைப்பதிவர் திருவிழா  நடக்க இருக்கின்றது.



கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா... 
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா...


என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா...
முத்துநிலவன்  வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட வலைப்பதிவர்  தினம் பாட!


கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!


பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
புதுக்கோட்டை அன்பர்களின் உழைப்பில்
புதிய வரலாற்றுச் சாதனை படைத்தும்
வலைப்பதிவர் திருவிழா நடக்க இருக்கின்றது 
எழில் பொங்கிடும் அன்பு புதுகையின் நெற்றியில்
வலைச்சித்தர் வழிகாட்டும் துணையோடு
வலைப்பதிவர் திருவிழா மீண்டும் நடக்க இருக்கின்றது. 



வாருங்கள்...தமிழ் வலைப்பதிவர் எல்லோரும்
வரவேற்க  உள்ளங்கள் காத்திருக்கின்றன...
வருக... வருக... நல்ஆதரவு தருக...!




வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!


20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்
 “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த
ஆலோசனைக் கூட்டம்

---------------------------------------------------------------------------















புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
  
புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர் நிலைமை தர்ம சங்கடமானது.. 
விழாவிற்கு முன்னும் பின்னுமாக நூற்றுக்கணக்கில் விழாப்பற்றிய பதிவுகளை வாரிவழங்கிய பதிவர்களின் அன்பை மறக்கமுடியாது! பாருங்களேன் -http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html

புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் வைகறையை அநியாயமாக இழந்த கொடிய சூழலில், விழாப்பற்றிய சிந்தனை யாருக்கும் எழவில்லை. அதோடு, பொருளாதார ரீதியாகவும் (அவரது குடும்ப நிதியாக ரூ.2.5லட்சத்துக்கு மேலும் அள்ளித் தந்த) நண்பர்களிடமே மீண்டும் பதிவர் திருவிழாவுக்குத் தருக என உடனடியாகக் கையேந்த இயலாத கையறு நிலை!   இந்த ஆண்டு, விழாவே வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்திருந்தோம். அதுவும் கடந்து போனது!

இப்போது... இணையத் தமிழ்ப்பயிற்சி கேட்டுப் பலரும் வற்புறுத்தி வரும் சூழலில், பயிற்சியை இந்த ஆண்டு முடிவிலும், வலைப்பதிவர் விழாவை –இப்போதைக்கு மாவட்ட அளவிலான விழாவாக- வரும் ஜனவரி மாதமும் நடத்திவிடலாம் என்று பேசியிருக்கிறோம்.



கடந்தமுறை முயன்று, கடைசியில் வரஇயலாத “தமிழ் இளைஞர்களின் மனம் கவர்ந்த மிகப்பெரிய ஆளுமை” ஒருவர், “அடுத்த விழாவில் உறுதியாகக் கலந்து கொள்கிறேன்” என்று இப்போது கிடைத் உறுதி நம்மைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பிலான பதிவர் திருவிழாவை நடத்திட நெட்டித்தள்ளியது.. 

இதோ ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்
முடிவுகள் வருமாறு –
(அ) இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் ( புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் மூன்றாவது பயிற்சி முகாம்) 
18-12-2016 ஞாயிறு ஒருநாள் பயிற்சி முகாம்.